முதற்பருவத்தேர்வு - நவம்பர் 2021. விடைக்குறிப்புகள்.
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , அரும்பாக்கம் , சென்னை - 600106.
முதற்பருவத்தேர்வு - நவம்பர் 2021. விடைக்குறிப்புகள்.
வகுப்பு : பத்தாம் தமிழ்த்தேர்வு மதிப்பெண் : 40.
நாள் ; நவம்பர்2021 கால அளவு ; 90 நிமிடம்.
பகுதி - அ
1. பின்வரும் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பல்வுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
அறிவினைத்துலங்க வைக்கும் பல கருவிகளுள் நூல் நிலையமும் ஒன்றாகும். கணக்கற்ற அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை, கண்டுபிடுப்புகளை , நூல்களாக எழுதி உள்ளனர். அந்த நூல்களை எல்லாம் முறையாகவும் , வரிசையாகவும், அழகாகவும் அடுக்கி வைத்துப்பயன்படுத்தும் ஓர் இடமே நூலகமாகும். நூல் நிலையத்தில் பலவகையான நூல்கள் இருக்கும். அவை இலக்கியம், இலக்கணம், வரலாறு, அறிவியல், புவியியல், உயிரியல், கணினியியல், கதை, கட்டுரை, புதினம், அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் திறனாய்வு நூல்கள் எனப் பல்வேறு பொருள்களைப்பற்றிய நூல்கள் இடம்பெற்றிருக்கும். அதனை வாங்கிப் படிக்க முடியாதவர்கள், நூல் நிலையத்தில் வந்து படித்துப் பயன் பெறலாம். நூல்நிலையத்தில் பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், பல்கலைக்கழக நூலகம், குழந்தைகள் நூலகம், அரசுப் பொதுநூலகம், நடமாடும் நூலாகும், நூல்களை வாடகைக்கு விடும் நூலகம் எனப்பல வகைகள் உள்ளன. நூல் நிலையங்கள் மாணவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளப் பெரிதும் பயன்படுகின்றன.மாணவர்கள் நூல்கள் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். கண்டது கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதை உணர்ந்து நூலகம் சென்று பயனடைவோம் .
வினாக்கள்:
1. அறிவினைத் துலங்கச்செய்யும் கருவி எது?
அ ) நூல் நிலையம் ஆ) அஞ்சல் நிலையம் இ) கல்விநிலையம் ஈ) அறநிலையம்
2. நூல்கள் அழகாகவும், வரிசையாகவும் வைக்கப்பட்டிருக்கும் இடம் எது?
அ ) கல்லூரி ஆ) நடமாடும் வண்டி இ) நூலகம் ஈ) பள்ளி
3. நூல்கள் எவற்றை வளர்க்க உதவும் ?
அ) செடிகளை ஆ) மனதை இ) திறமை ஈ) அறிவை
4. கண்டத்தைக் கற்றவன் ----------- ஆவான்.
அ ) பண்டிதன் ஆ) அறிவாளி இ) அறிவொளி ஈ) விஞ்ஞானி
5. மாணவர்களுக்கான சிறந்த பழக்கம் எது..?
அ ) உண்ணும் பழக்கம் ஆ) படிக்கும் பழக்கம் இ) உறங்கும் பழக்கம் ஈ) எழுதும் பழக்கம் .
2.பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்துப் பொருள் உணர்ந்து தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக 5*1 = 5.
சங்க காலத்திலிருந்தே அரசனாயினும் , வாரியார் ஆயினும் விருந்தினர்களைப்போற்றினர் . கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டிற்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது, விருந்து புர ப்பது குறைந்ததால் சத்திரங்கள் பெருகின. நாயக்கர்கள் , மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சாத்திரங்கள் வழிச் செல்லுவோருக்காகக் கட்டப்பட்டன. புதியவர்களான விருந்தினர்களை ஏற்பது குரணித்து விட்ட காலத்தில் , ஓரளவு தெரிந்தவர்களை மட்டுமே விருந்தினர்களாக ஏற்றனர் .படிப்படியாக உற்றார் , உறவினர் , நண்பர்கள் ஆகியோரையே விருந்திணைகளாகப் போற்றும் நிலைக்கு மாறினர். புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் , அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர் . இன்று வீட்டிற்கு திண்ணை வைத்துக்கட்டுவதும் இல்லை.
வினாக்கள் :
1. விருந்து போற்றியோர் யார்?அ) அறவோர் , அந்தணர். ஆ) இடையர் , ஆயர்கள் இ) அரசன், வறியோர் ஈ) கடையர், மடையர்.
2. விருந்து - என்பதன் பொருள்..?
அ) உறவினர் ஆ) நண்பர் இ)புதியவர் ஈ) வறியவர்
3. சாத்திரங்கள் யாருக்காகக் கட்டப்பட்டன ?
அ உறங்குவோருக்காக ) ஆ) வழிப்போக்கருக்காக இ) நோயாளிகளுக்காக ஈ) எதிரிகளுக்காக
4. யாரைத் தற்காலத்தில் விருந்தினராக ஏற்பதில்லை ?
அ) புதியவர்களை ஆ) ஊராரை இ) நாட்டாரை ஈ) நாடோடிகளை
5. தற்கால வீடுகளில் இல்லாதது எது ?
அ ) விருந்து ஆ) வாழையிலை விருந்து இ) திண்ணை ஈ) கதவு
பகுதி - ஆ இலக்கணம்
3. .சான்று தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1.சொல்லிசை அளபெடை
அ) தீதொரீஇ ஆ) படாஅபறை இ) ஓஒதல் வேண்டும் ஈ) தூஉம் மழை.
2. உவமைத்தொகை
அ )உருவகம் ஆ)வினைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ)பஞ்சுவிரல்.
3. அன்மொழித்தொகை
அ ) கயல் பாடினாள் ஆ)சிவப்புப்புச்சட்டை பேசினார்
இ) தேர்ப்பாகன் ஈ) கருங்குரங்கு.
4. தொழிற்பெயர்
அ ) ஆடு ஆ) ஆடினாள் இ) ஆடினார் ஈ) ஆடல்.
5. வேற்றுமைத்தொடர்
அ ) கட்டுரை படித்தான் ஆ) கட்டுரை படி
இ) கட்டுரையைப்படித்தான் ஈ) படித்தான் கட்டுரை.
4. நிரப்புக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது ---------- எனப்படும்.
அ )தொடர் மொழி ஆ) அளபெடை இ)பொதுமொழி ஈ) தனிமொழி
2. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ----------- தொழிற்பெயர் ஆகும்.
அ ) அடுக்குத்தொடர் ஆ) இரட்டைக்கிளவி இ) விகுதிபெற்ற தொழிற்பெயர் ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்
3. தொகைநிலைத்தொடர் ----------- வகைப்படும்.
அ ) ஆறு ஆ) ஏழு இ) எட்டு ஈ) ஒன்பது
4. காலம் கரந்த ---------------- வினைத்தொகை ஆகும்.
அ ) பெயரெச்சமே ஆ) வினையெச்சமே இ) தெரிநிலை வினைமுற்று ஈ) குறிப்பு வினைமுற்று.
5. எழுவாய்த் தொடரானது ------- வகையாக அமையும்.
அ ) இரண்டு ஆ) நான்கு இ) மூன்று ஈ) ஐந்து
5. கூறிவாறு செய்க ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. கரும்பு தின்றான் ( எவ்வகைத் தொகை நிலை )
அ ) உவமைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ)வேற்றுமைத்தொகை ஈ)வினைத்தொகை
2. பரிசு பெற்றான் ( வினையால் அணையும் பெயராக்குக )
அ ) பரிசு பெறு ஆ) பெற்றான்பரிசு இ) பரிசு பெற்றவனைப்பாராட்டினர் ஈ) பரிசுபெற்றான் பாராட்டினர்.
3.பவளவாய் ( உருவகமாக்குக )
அ )வாய்ப்பவளம் ஆ) பவளம் இ) வாய்ப்பவள் ஈ) பல்லாகிய வாய்
4. செந்தாமரை ( எவ்வகைப் பண்புத்தொகை )
அ ) வண்ணம் ஆ) வடிவம் இ) அளவு ஈ) சுவை
5. சிரித்துப்பேசினார் ( அடுக்குத்தொடராக்குக )
அ ) சிரித்துச் சிரித்துப்பேசினார். ஆ) அழுது அழுது பேசினார் இ) கலகலவெனச் சிரித்தார் ஈ) பேசிப்பேசி சிரித்தார்.
6. இலக்கணக்குறிப்புத் தருக ( எவையேனும் மூன்று மட்டும் ) 3*1 = 3.
1. உறாஅர்க்கு உறுநோய்
அ) செய்யுளிசையளபெடை ஆ) அடுக்குத்தொடர் இ) ஒற்றளபெடை ஈ)வினையாலணையும்பெயர்.
2. அமுதா பாடினாள்
அ ) வினையெச்சத்தொடர் ஆ) குறிப்பு வினையெச்சம் இ) தெரிநிலை வினைமுற்று ஈ) தொடர்மொழி.
3. கேட்ட பாடல்
அ ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத்தொடர் இ) எழுவாய்த்தொடர் ஈ) வினைமுற்றுத்தொடர்.
4. மாமன்னர்
அ ) பொதுமொழி ஆ) இடைச்சொல்தொடர் இ) உரிச்சொல்தொடர் ஈ) குறிப்பு வினைமுற்று.
5. கொல்களிறு
அ ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) இருபெயரொட்டுப்பண்புத்தொகை.
பகுதி - இ - இலக்கியம்.
7. பின்வரும் கோடிட்ட இடங்களை நிரப்புக. 3*1 = 3.
1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
------------------ காண்பது அறிவு.
அ) எப்பொருள் ஆ) மெய்ப்பொருள் இ)இப்பொருள் ஈ) நற்பொருள்
2. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் : கண் என்னாம்
காண்ணோட்டம் இல்லாத -------------.
அ ) கண் ஆ) காண் இ) செயல் ஈ) காலை
3. அருமை உடைத்தன் றசாவாமை வேண்டும்
பெருமை ---------- தரும்
அ) முயற்சி ஆ) பயிற்சி இ) உயர்ச்சி ஈ) தளர்ச்சி
8. பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்துப் பொருள் உணர்ந்து, தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. \5*1 = 5.
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.
1. இப்பாடலில் ஒப்பிடப்படுபவை எவை?
அ ) முத்தமிழ் - முக்கடல் ஆ) கடல் - கப்பல்
இ) கடல் - சங்கு ஈ) கடல் - தமிழ்
2. தமிழிணைக் காப்போர் யார்?
அ) சான்றோர் ஆ) மூத்தோர் இ) புலவர்கள் ஈ) பெண்டிர்
3.அணிகலன்களாக இருப்பவை எவை ?
அ) புராணங்கள் ஆ) காப்பியங்கள் இ) சிற்றலக்கியங்கள் ஈ) புறநானூறு
4.ஒரு பாடலை , இருபொருள் தருமாறு அமைப்பது ----------------- எனப்படும்.
அ) இரட்டுற மொழிதல் ஆ) இருபொருள் இ) ஒப்பிடுதல் ஈ) கூட்டு
5. படலாசிரியரின் இயற்பெயர் என்ன?
அ ) சந்தைக்கவிமணி ஆ) தமிழழகனார் இ) பாரதியார் ஈ) சண்முக சுந்தரம்.
9. பின்வரும் பலவுள் தெரிவு வினாக்களுள் எவையேனும் ஐந்தனுக்கு விடைகளை எழுதுக. 5 * 1 = 5.
1.வரகு , கேழ்வரகு போன்றவற்றின் உமிக்கு வழங்கப்படும் பெயர் --------------------- ஆகும் .
அ )தொம்பை ஆ) கொம்மை இ) பொம்மை ஈ) கெம்பை
2. தென்னை , பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு ---------- எனப்படும்.
அ) குரும்பை ஆ) முட்டு இ) கச்சல் ஈ) பூம்பிஞ்சு
3.இயற்கையின் கூறுகளில் காற்றின் -------- கூடுதலானது.
அ) பங்கு ஆ) போக்கு இ) ஆக்கம் ஈ) தேக்கம்
4. வண்டோடு புக்க மணவைத்த தென்றல் இடம்பெற்ற நூல் -----------.
அ ) சிலப்பதிகாரம் ஆ) சிவபுராணம் இ) சீவக சிந்தாமணி
ஈ) பெரிய புராணம்
5. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் -
எனும் வரிகள் இடம்பெற்ற நூல் ----------------------.
அ ) ஆத்திசூடி ஆ ) திருக்குறள்
இ ) குறுந்தொகை ஈ ) கொன்றை வேந்தன்
6. தலைவாழை இலையில் விருந்தினருக்கு விருந்தளிப்பது நம் ----------
கருதப்படுகிறது .
அ) பழக்கமாக ஆ) வழக்கமாக இ) மரபாக ஈ) வழிவழியாக
7.குரல் உணங்கு விதைத்தினை உரல்வாய்ப்பெய்து
சிறிது புறபட்டன்றோ இலள் - காட்சிப்படுத்தும் நூல் ---------------.
அ ) புறநானூறு ஆ ) அகநானூறு இ ) கலித்தொகை
ஈ) அகத்தியம்.
10. பின்வரும் துணைப்பாடப் பகுதியைப் படித்துப் பொருள் உணர்ந்து, தொடர்ந்து வரும் பலவுள் தெரிவு வினாக்களுக்கு ஏற்ற விடைகளை எழுதுக. 5*1 = 5.
ஒரு வேப்பமரத்தின் அடியில் ஏகப்பட்ட மண்கலயங்கள் இருந்தன. அந்தக் கறுப்புக் கலயங்கள், அந்தக்கரிசல் மண்தரையில் பாதி புதைக்கப்பட்டிருந்தன. தேங்காய்ப்பருமனுள்ள கற்களால் கறுப்புக் கஞ்சிக் கலயங்கள் மூடப்பட்டிருந்தன. காகங்கள் வந்து கஞ்சிக்கலயங்களை உருட்டி விடாமலும் , அலகை நுழைத்து அசிங்கப்படுத்திவிடாமலும் இருக்க இந்த ஏற்பாடு , பின்னர் கேட்டுத்தெரிந்து கொண்டான் மணி. ஒருகலயத்தின் மேல் வைக்கப்பட்ட கல்லை அகற்றினார் அன்னமய்யா.ஒரு சிரட்டையில் காணத்துவையலும் ஊறுகாயும் இருந்தன. சிரட்டையே அந்தக்கலயத்தின் வாய்மூடியாகவும் அமைந்திருந்தது.
வினாக்கள்:
1. வேப்பமரத்தின் அடியில் இருந்தவை எவை.?
அ ) உழவர்கள் ஆ) கரிசல் மண் இ) காகங்கள் ஈ) மண்கலயங்கள்
2. சிரட்டை எதுவாக இருந்தது ?
அ ) ஊறுகாயாக ஆ) துவையலாக இ) மூடியாக ஈ) ஆதாரமாக
3. அலகு = பொருள் தருக?
அ ) சாக்கு ஆ) மூக்கு இ) பாக்கு ஈ) போக்கு
4.கல்லை அகற்றியவர் யார்?
அ) அன்னமய்யா ஆ) மணி இ) காகம் ஈ) சுப்பையா
5. கஞ்சிக்கலயங்கள் தரையில் எப்படி இருந்தன ?
அ ) பாதுகாக்கப்பட்டு ஆ) பாதிபுதைக்கப்பட்டு இ) மூடப்பட்டு
ஈ) பத்திரப்படுத்தப்பட்டு.
ponanbu
Comments
Post a Comment