நூல் வெளியீட்டு விழா - 4 . 09.10.2021

 

நூல் வெளியீட்டு விழா -04

 09.10.2021

                   
  பட்டினித் தடாக்கத்துப்   பாசமலர்கள்    
   
கவி. செங்குட்டுவன்  அவர்கள்                                       

நேரம் : காலை 11 மணி    சனிக்கிழமை 


வரவேற்புரை:

 கவிஞர்  நிஜந்தன் அவர்கள்                                               மணப்பாறை.         
                                        அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம் 




வெளியிடுபவர் .

முனைவர் , பேராசிரியர் செ . ஜெயந்தி
                                        தமிழ்த்துறைத்தலைவர் 
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி
சங்ககிரி. சேலம் மாவட்டம். 
 
              
                                                                  

பெற்றுக்கொண்டு சிறப்புரை வழங்குபவர் :
                                                *

 சிந்தனைக்கவிஞர் , சைவ சித்தாந்த ரத்தினம் 

                                         பறம்பு இரா . நடராஜன் அவர்கள் 

                                       அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம்

                                        கணக்கு தணிக்கையாளர்  ,   நூலாசிரியர்      


வாழ்த்துரை   : 

 பொறிஞர். தமாம் பாலா  -   வியட்னாம் 

                                          

நூல் மதிப்புரை  :   கவிமாமணி வெற்றிப் பேரொளி  அவர்கள் 

                                          

சனிக்கிழமை வணக்கம் கவிஞர் பெருமக்களே..
    *எனக்குள் நான்*-இது எழுத்துலகின் ஜாம்பவான்களாக வலம் வரும் சிறந்த கவிஞர்கள் அவர்கள் பற்றி அவர்களாலேயே  உங்களுடன் பகிரும் பகுதி. இந்தவாரம் திருக்குவளை கவிஞர் #திருக்குவளைவெற்றிப்பேரொளி அவர்கள்.

  முப்பது வருட எழுத்து அனுபவம்,பல எழுத்துலக பிரமாக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்,கலைஞர் கருணாநிதி பிறந்த மண்ணில் தவழ்ந்து,பெயருடன் ஊரை ஒட்டிக்கொண்டவர்.அவரைப்பற்றி நிறைய..
இதோ அவரே

எனக்குள் நான்...
******************
                 நான் வெற்றிப்பேரொளி.

                  நிலாமுற்றத் தோழமைகட்கு அன்புப் பூச்செண்டு. 

அகவெளிச்சம்.
""""""""""""""""""
                  என் கடந்த காலத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறேன். 22-06-1951 
நான் தாய்மடி கண்டநாள். ஊத்துக்கோட்டை நான் பிறந்தஊர். அப்போது செங்கற்பட்டு மாவட்டம் ; இப்போது திருவள்ளூர்.

அப்பா இரா.சண்முகம். அம்மா அம்மாக்கண்ணு. இருவரும் படமாக வாழ்கிறார்கள். 

திருக்குவளை மருத்துவமனை கட்டட மேற்பார்வைக்குச் சென்ற நான் ஓர் ஓரவிழிக் கீழ்ப்பார்வையில் சிக்கினேன்.
 சாதிகள் கடந்த மனக்கலப்பு 11-06-1978 ல் மணக்கோலம் தந்தது. வாழ்விணையர் பெயர் பத்மாவதி. 40 ஆண்டுகளைத் தாண்டிய காதல்மண வாழ்வில் முத்தமிழாய் மக்கள் மூவர். மகள்கள் இருவர்; மகன் ஒருவர். அவர்கள் வழி திராவிடமாமன்னன், மலர்க்கொடி ( பத்மசிறீ), திருவாசகம் என்று மூன்று சுட்டிச் சொர்க்கங்கள் இப்போதெங்கள் உயிர் மூச்சு. 

புறவெளிச்சம்
""""""""""""""""""""""""
 என் இயற்பெயர் ஜெயப்பிரகாஷ். என்னை வெற்றிப்பேரொளி என விளங்கவைத்தவர் குருவிக்குடில் தணிகை உலகநாதன் அவர்கள்.
              பதினோராம் வகுப்புவரை உள்ளூரில். புகுமுக வகுப்பு பொன்னேரி அரசினர் கல்லூரி. இடைநிலை ஆதார ஆசிரியர் பயிற்சி வாலாஜாபாத்.

               அப்பா பெரிய கல்வியாளர் இல்லை. ஆனால் வாசிப்பு எனக்கு அப்பா தந்த கொடை. வீட்டிற்கு தினமணி, நவசக்தி, நாத்திகம், விடிவெள்ளி, ஜெயபேரிகை, கடிதம் நாளிதழ்கள் , கல்கி, ஆனந்தவிகடன் வாரஇதழ்கள், சோவியத்நாடு மாதஇதழ் வாங்கப்படும்.
           அப்பா அதிதீவிர காங்கிரசுக்காரர். நான் இளைஞர் காங்கிரசு உறுப்பினர். நகர சிவாஜி இரசிகர் மன்ற செயலாளர்.
ஸ்தாபன காங்கிரசு, ஜனதா என நகர்ந்து இப்போது தி.மு.க.

            ஊத்துக்கோட்டை நூலகம் என்  இரண்டாம் தாய்வீடு. அம்புலிமாமாவிலிருந்து   அமெரிக்கன் ரிப்போர்டர் வரை அத்துப்படி.
தமிழ்வாணன் தொடங்கி மொழிபெயர்ப்பாளர் த.நா.குமாரவேல் முடிய புரண்டெழுந்தேன். இந்த வாசிப்புதான் என்னைப் படைப்பாளனாய் வார்த்து, கவிஞனாய் வடித்துள்ளது.

குடும்பச் சூழல் என்னை தஞ்சாவூருக்குத் தள்ளிக்கொண்டு வந்தது.
ஆசிரியர் பணி கிடைத்ததோ இணயர்ஊரான திருக்குவளையில். இதனால் நான் கீழத்தஞ்சைக்கும் மேலத்தஞ்சைக்கும் இலக்கியப்பாலமானேன்.

           என் வாசிப்பு தினத்தந்திக்கு வாசகர் கடிதம் எழுதவைத்தது. அது வளர்ந்து கவிதைகளானது. இந்த நேரத்தில் சிற்றிதழ்கள் அறிமுகமாயின.  நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களில் எழுதிக்குவித்தேன். இன்று 200க்கும் மேலான இதழ்களில் எழுத்தும் உறவும் தொடர்கிறது.
      கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், பாக்யா, சுபமங்களா, முரசொலி மற்றும் பல முன்னணி இதழ்களிலும் நான் படைப்பாளி.

  இதே காலகட்டத்தில் தஞ்சையில் சுகன் தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை உறவும், திருவாரூரில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்  நட்பும், திருக்குவளையில் முத்தமிழ் மன்றம் தொடர்பும் என்னை அரவணைத்தன. என் இலக்கியவெளி விரிந்தது. தமிழகமெங்கும் கவியரங்கப் பயணம் தொடங்கியது.

1991  பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு என் வாழ்வின்  இனிப்பாண்டு. உலகத் தமிழ்க்கவிஞர் பேரவை மாநாட்டில் கலைஞரிடம் "கவிமாமணி  விருது" பெற்றேன். தமிழக அரசு நடத்திய புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு கவிதைப்போட்டியில் பரிசும் பாராட்டும் அடைந்தேன். திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் தெப்பக்கவியரங்கத்தை உவமைக்கவிஞர் சுரதா தலைமையில் கண்டு சாதனைபடைத்தேன்.
                சுரதா, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா,வைரமுத்து ,கவிதைப்பித்தன், நாமக்கல் நாதன், ஆரூர் தமிழ்நாடன்  தலைமையில் கவிதை பாடி என்னுடைய தலைமையிலேயே பல கவியரங்குகளை அரங்கேற்றியுள்ளேன். பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர், தனிப்பொழிவு என மேடைகளில் வலம் வந்துகொண்டுள்ளேன்.

பொறுப்புகள்:
------------------------
            உலகத் தமிழ்கவிஞர் பேரவை - துணைப்பொதுச்செயலர் ;
தஞ்சை தமிழ்த்தாய் இலக்கியப் பேரவை  - தலைவர்;
 திருக்குவளை முத்தமிழ் மன்றம் - செயலர்;
கவிதைவெளி முழுநிலாச் சந்திப்பு - நிறுவுநர்.

அச்சு ஊடகங்களுக்கு அப்பாலான ஊடக
•••••••••••••• உறவு
  சன், ஜெயா,கலைஞர், பொதிகை, டான் தமிழ்ஒளி  -காட்சி ஊடகங்கள் .

திருச்சி, காரைக்கால், சீன வானொலி (தமிழ்ப்பிரிவு)-குரல் ஊடகங்கள்.
 
நூலாசிரியர்
''''''''''''''''''''''''''''''
சந்தனப் பந்தல், 
கருப்புநெருப்பு, 
சொல்பருக்கைகள் (1)
சொல்பருக்கைகள் (2)

விருது பரிசு வெளிச்சம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
 கவிமாமணி கவித்தென்றல் கவிவேந்தர் கவிப்பேரொளி தமிழ்த்தென்றல்......
இப்படி 25 க்கு மேல்.

தமிழக அரசு மும்முறை பரிசு.
இருமுறை ரூ.5000 , ஒரு வெண்பாவுக்கு ரூ.1000,  நிலாமுற்றம் "2017 - தைமகளே வருக!" கவிதைக்கு ரூ.1000 ..... இப்படி பரிசுகள் வெற்றிமாலை இட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஆசிரியப்பணி
::::::::::::::::::::::::::::
              29 ஆண்டு ஆசிரியப் பணியில் 27 ஆண்டுகள் உள்ளூரில் ( திருக்குவளையில்) பணிபுரிந்துள்ளதே என் பணிக்கான மக்கள் ஏற்பினை உணர்த்தும். தொடக்கப் பள்ளி அளவில் அறிவியல் கண்காட்சி, திருவிழா போல ஆண்டு விழாக்கள் [1986- ல் பள்ளி நூற்றாண்டு விழாவில் "முன்னாள் மாணவராய் " கலைஞர் பங்கேற்பு. வரவேற்புப்பா வாசித்தளிக்கும் பொன்வாய்ப்பு எனக்கு.)] 

பணிநிறைவு பெற்றபின்னும்
பெற்றோர் மாணவர்களின் அன்பும், மரியாதையும் இன்றும் தொடர்வது என் வாழ்வின் வரம்.

உடன் பணியாற்றும்  ஆசிரியர்களிடம் , மாற்றணி  நண்பர்களிடம் நல்லிணக்கமும் நட்புறவும்.

இவையெல்லாம் சேர்ந்து தமிழக அரசின்  "டாக்டர் இராதாகிருஷ்ணன் (நல்லாசிரியர்) விரு'தினைப் பெற்றுத்தந்தன.

இயக்கவாதி.
---------------------
 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.
இதன் நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய செயலர் பொறுப்பு வகித்துள்ளேன். 

இயக்கப் போராட்டங்கள்
அனைத்திலும் முனைப்புடன் பங்கேற்று சிறை சென்றுள்ளேன். 

அமைப்பின் பொதுச்செயலர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் எங்கள் மூன்று மாத ஆண் மகவுக்கு கபிலன் என்று பெயர் சூட்டினார். 30ஆம் வயதில் கபிலனின் திருமணத்தைத் தலைமைதாங்கி நடத்தியவரும் பாவலரே!

நிறைவாக....
''''''''''''''''''''''''''''''''''

" தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்" 
தோன்றிட 
நானும் சுகனுமே முதல்வித்தாய் இருந்திருக்கிறோம்.

இளைய படைப்பாளிகள் பலருக்குத் தூண்டுகோலாய் இருந்து வருகிறேன்.

பல புதிய கவிஞர்களின் முதல் தொகுப்புக்கு வாசல் திறந்திருக்கிறேன்.

அணிந்துரைகளால்  அவர்களின் சிறகு வளர்த்து இலக்கியவானில் பறக்கச் செய்திருக்கிறேன்
.
தமிழுக்கு உழைப்பவர்களுக்குத் துணைநின்று தொண்டாற்றலில் நெஞ்சு மகிழ்கிறேன்.

நன்றிக் கல்வெட்டு.
கவிதைப் பெரியார் சுரதா

பாவலர் க.மீனாட்சிசுந்தரம்

இலக்கியக்காவலர் சி.நா.மி. உபயதுல்லா, தஞ்சை.

கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்

திரு.பாரதி, இமயப்பதிப்பகம், நாகை.

இவர்களுடன்....
என் காதல் இணையர்
பத்மாவதி. 

துயரச் சிலுவை.
++++++++++++++

என் இலக்கியப் பயணத்தின் இடையில் பிரிந்த......
பாட்டுச் சிறுத்தை 
பையூர் பாநலவேந்தன்,
தனித்தமிழ் நாவலர் தச
சரவணத்தமிழனார்,
கவிஞர் ஆலங்குடி ஆபா,
திரைப்பாடலாசிரியர் வாசன், 
தஞ்சைப்ரகாஷ்
புத்தகன் 
குன்றம் ராமரத்நம்....

இன்னும் என இதயத்தைத் துளைத்துக் கொண்டிருக்கும் 

என்
சுகன்.

@@@@@@@@@@@@@@

"எனக்குள் நான்" தலைப்பில்  என்னை எனக்குள் பயணிக்கவைத்து,
ஒரு பொருள் பொதிந்த, பயனுள்ள வாழ்வை வாழ்ந்து வருகிறோம் என்ற மகிழ்வையும், எஞ்சிய வாணாளையும் இப்படியே நன்றாற்றிட உறுதியையும் கொள்ளவைத்த.....

நிலாமுற்றம் குழுமத்தினருக்கும் 
குறிப்பாக
தம்பி முத்துப்பேட்டை மாறன்
தம்பி தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை
ஆகியோருக்கும் 
வாசிக்கும் உங்களுக்கும்

நன்றிப்பூச்செண்டு.

என்றும் வற்றா அன்புடன்,
வெற்றிப்பேரொளி.


நூல் ஏற்புரை  :   

கவி. செங்குட்டுவன் ஊத்தங்கரை 

                                      அறங்காவலர் ஒரு ருபாய் தமிழ் மன்றம் 
                                      தலைமையாசிரியர் , ஊடகவியலாளர் ,
                                              

        தமிழன் என்று சொல்லடா....!!         தலை நிமிர்ந்து நில்லடா..!! 


வாழ்க   வளமுடன் ..!  வாழ்க  வையகம் ..!!


நிகழ்ச்சி  சிறக்க  துணை நின்ற  அனைவருக்கும்  நன்றிகள் 


வணக்கம் 


நிகழ்ச்சி  சிறக்கத்   துணை நின்ற  அனைவருக்கும்  நன்றிகள் 

வணக்கம் 


ponanbu







                                        

Comments

Popular posts from this blog

பத்தாம் வகுப்பு - இயல் 4 விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

பத்தாம் வகுப்பு - இயல் -5 புதிய நம்பிக்கை - கமலாலயன் ( மொழிபெயர்ப்புக் கதை )

அலுவலகக்கடிதம் செப்டெம்பர் 2023