வகுப்பு : எட்டாம் தமிழ்த்தேர்வு - விடைகள் 04.10.2021 thingal kizhamai
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி ,
எண்-: 815 , கோலப்பெருமாள் பள்ளித்தெரு , சென்னை - 600106.
வகுப்பு : எட்டாம் தமிழ்த்தேர்வு - விடைகள் மதிப்பெண் : 40.
முதற்பருவம்
நாள் : 04.10.2021. கிழமை : திங்கள்
அ. நிரப்புக 4* 1 = 4.
1. வினைமுற்று ---------- வகைப்படும் .
அ. 7 ஆ. 5 இ. 2 ஈ. 3
2. ஏவல் ----------- ஒருமை , பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.
அ. வினைமுற்று ஆ. பெயரெச்சம் இ. வினையெச்சம் ஈ. தெரிநிலை வினைமுற்று .
3.பொருள்முடிவு பெறாத எச்சவினை பெயரைக்கொண்டு முடிந்தால்
------------.
அ. முற்று ஆ. பெயரெச்சம் இ. குறிப்பு வினையெச்சம் ஈ. வினையெச்சம் .
4. ஒரு வினைமுற்று , எச்சப்பொருளைத் தந்து மற்றொரு வினைமுற்றைக்கொண்டு முடிந்தால் அது,----------- ஆகும்.
அ. வினைமுற்று ஆ. பெயரெச்சம் இ.முற்றெச்சம் ஈ. வினையெச்சம் .
ஆ. சான்றுதருக: 3*1 =3.
1. வினைமுற்று
அ. மாணவன் படித்தான் ஆ. படித்த மாணவன் இ. படித்து வந்தான் ஈ. படித்து வென்றான்
2. குறிப்புப் பெயரெச்சம்
அ. கண்டான் உண்டான் ஆ. ஆடிய மயில் இ. பாடிய பாடல் ஈ. பெரிய ஊர்
3.வினையெச்சம்
அ. நடந்து --- ஆ. ஓடிய --- இ. கேட்ட --- ஈ. விழுந்தான் ---
இ . நகவளைவில் குறித்தவாறு செய்க. 3 *1 =3.
1.பாடுகின்ற பாடல் ( எதிர் காலப்பெயரெச்சம் ஆக்குக )
அ. பாடுகின்ற பாடல் ஆபாடுகின்ற பாடல். இ. பாடுகின்ற பாடல் ஈ.பாடும் பாடல்.
2.மெல்ல நடந்தான் ( எவ்வகை எச்சம் என எழுது )
அ. குறிப்புப்பெயரெச்சம் ஆ. குறிப்பு வினை எச்சம் இ. தெரிநிலைவினையெச்சம் ஈ. முற்றெச்சம்
3. வாழ்க வாழ்க ( எவ்வகை வியங்கோள்வினைமுற்று என்று எழுதுக.)
அ. வாழ்த்துதல் ஆ. வைதல் இ. வேண்டுதல் ஈ. விதித்தல்
ஈ. செய்யுள் பாடல் வினா விடை 5 * 1 = 5.
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவும் ஆகும் நிழல் இகழும் பூணாய்.........!
1.நோய் எத்தனை வகைப்படும் ?
அ. இரண்டு ஆ. நான்கு இ. ஏழு ஈ. மூன்று
2. உள்ளிருந்து துன்பம் தருபவை எவை?
அ. உறவுகள் ஆ. பெற்றோர் இ. நோய்கள் ஈ. நண்பர்கள்
3. மருந்தால் தீருபவை எவை?
அ. தலைவலி ஆ. வாதநோய் இ. உடல்நோய் ஈ. உடல் வீக்கம்
4. பாடல் இடம்பெற்ற நூல் எது ?
அ. நல்வழி ஆ. நீலகேசி இ. திருக்குறள் ஈ. நன்னெறி
5. நோயும் மருந்தும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் , எந்தச் சமயம் சார்ந்தது ?
அ. சமண சமய நூல் ஆ. சைவ சமய நூல்
இ. வைணவ சமய நூல் ஈ. பெளத்த சமய நூல்.
உ . செய்யுள் வினா விடை 5 * 1 = 5.
1. உள்ளத்தின் நோய்கள் தீர்க்கும் மருந்துகள் எவை ?
அ. நல்லறிவு , நற்காட்சி , நல்லொழுக்கம்
ஆ. நல்வழி , நன்னெறி , இன்னா நாற்பது
இ. கற்றோர், சான்றோர் , சாட்சிகள்
ஈ. உற்றார் , பெற்றோர் , நண்பர்கள்.
2. அதிகமாக உணவு உண்டால் -------- ஏற்படும் .
அ. உள்ளக்கோளாறு ஆ. நோய் இ. செரிமானக்கோளாறு
ஈ. உடல்நலக்குறைபாடு.
3. விளைந்த பயிர்கள் உணவு தந்து , நாட்டின் ---------- போக்குகின்றன?
அ. வறுமை ஆ. வளமை இ. இளமை ஈ. இனிமை
4. , தக்கார் ---------------- என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
அ. தகவிலர் ஆ. கதாவிலார் இ. பதவிலார் ஈ. திசைவிலார்
5. வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் ----------
ஓடாது ..?
அ. பாலைவனத்தில் ஆ. வானத்தில் இ.கடலில் ஈ. காற்றில்
ஊ. உரைநடை பத்தி வினா விடை 5*1 =5.
நோய் வந்த பின்பு மருத்துவ மனைக்குச் செல்வதைவிட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள். சரியான உணவு ,
சரியான உடற்பயிற்சி , சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ வைக்கும். விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள். எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள் , கீரைகள்,பழங்கள் , சிறுதானியங்களை உணவில்சேர்த்துக்கொள்ளுங்கள் . கணினித்திரையிலும் , கைப்பேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்துவிடுங்கள். நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள். உயிர்நேரத்தில் உறங்கச்செல்லுங்கள். அதிகாலையில் விழித்து எழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.
1. எப்போது நாம் எழ வேண்டும் ?
அ. மாலையில் ஆ. மதியத்தில் இ.அதிகாலையில்
ஈ. இரவில்'.
எது ?
அ. வருமுன் காப்பது ஆ. வருமுன் ஓடுவது இ. வருமுன் உறங்குவது ஈ. வந்தபின் தவிப்பது.
3. உடல் நலம் காக்க எத்தனை வகையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும் ?
அ. ஆறு ஆ . நான்கு இ. மூன்று ஈ. பத்து
4. நாம் நலமாய் வாழ உண்ண வேண்டியவை எவை ?
அ. வாழை , பலா, கொய்யா ஆ. கம்பு , சோளம், கேழ்வரகு.
இ. கீரைகள் , நெல் , தேங்காய்.
ஈ. காய்கறிகள் , பழங்கள், கீரைகள்.
5. எவ்வெவற்றை நாம் தவிர்க்க வேண்டும்?
அ. மேடையில் ஆடுவதை, ஆ. தெருக்களில் ஓடுவதை,
இ. கணினியிலும், கைபேசியிலும் விளையாடுவதை,
ஈ. கூட்டமாகவும் , தனியாகவும் இருப்பதை.
1. நோய்கள் பெருக்கக்காரணம் ------------------ ஆகும்.
அ. இயற்கையோடு இயைந்து வாழாமை ஆ. செயற்கை முறை இ. மழையின்மை ஈ. புரிதலின்மை.
அ. இலை மருத்துவம் ஆ. மூலிகை மருத்துவம் இ. நோய் அடங்கியிருப்பது ஈ. நோய் மீண்டும் வராமலிருப்பது.
3. மருத்துவம் எப்போது தொடங்கியது ..?
அ. பூமி உருவானபோது ஆ. மழை பெய்தபோது இ. மனிதன் தோன்றிய போது ஈ. விலங்குகள் தோன்றியபோது.
4. ஆங்கில மருத்துவத்தினால் மனிதனுக்கு ஏற்படும் விளைவு
என்ன.. ?
அ. பக்க விளைவுகள் உண்டு . ஆ. பக்க விளைவுகள் கிடையாது இ. நோய் முற்றிலும் நீங்கும் ஈ. நோய் முற்றிலும் நீங்காது.
அ. ஓட்டப்பயிற்சி ஆ. நடைப்பயிற்சி இ. தாவும் பயிற்சி
ஈ. நீந்தும் பயிற்சி.
6. பூமிக்கு அணுக்கமாக உள்ளவை -----------------.
அ. வானம் , கற்று, நீர். ஆ. மரம்,செடி , கொடி
இ. விலங்கு,பறவை , மனிதன் ஈ. புழு ,பூச்சி , வண்டு .
7. எங்களின் கால்களைத் தாங்கி நிற்கும் நிலமானது எமது
-------------------- எரிந்த சாம்பலாகும்.
அ. பாட்டன்மார்களின் ஆ. தந்தைமார்களின்
இ. சகோதரர்களின் ஈ. சகோதரிகளின்.
8. நாங்கள் வாழும் நிலமானது --------------- மதிக்கக்கூடிய
ஒன்றாகும் .
அ. ஆதிவாசிகளும் ஆ. மனிதர்களும் இ. தெய்வங்களும் கண்டார்கள் என்போர்
ஈ. விலங்குகளும்
ஏ. துணைப்பாட வினா விடைகள் 7 * 1 = 7.
1.காடர்கள் என்போர் யார் ?
அ. நாடோடிகள் ஆ. பழங்குடியின மக்கள் இ. மலைவாழ் மக்கள் ஈ. பெருங்குடிகள்.
அ. கூரன் ஆ. ஆந்தை இ. புலி ஈ. வெட்டுக்கிளி.
3. அச்சத்திலேயே வாழ்ந்து வருவது யார் ?
அ. மரங்கள் ஆ. பறவைகள் இ. பித்தக்கண்ணு
ஈ. வெட்டுக்கிளி.
4. கூரன் பதுங்கி இருந்த இடத்தில் முகர்ந்து பார்த்த போது ,
-------------- நாற்றமே அடித்தது.
அ. புனுகுப்பூனையின் ஆ. வேட்டை நாயின்
இ. குட்டிமுயலின் ஈ. ஆட்டுக்குட்டியின்
அ. பயத்துடன் ஆ. வீரத்துடன் இ. புகழுடன் ஈ. இன்பமுடன் .
6. கதை மூலமாக நாம் உணரும் நீதி என்ன ?
அ. கொடுத்த வகை காப்பது ஆ. பிறரைக்காப்பது
இ. எதிரிகளை அழிப்பது ஈ. உத்திகளை உருவாக்குவது.
7. -------------------- சருகுமானும் என்பது பழங்குடி மக்கள் தங்களின் பேரன் பேத்திகளுக்குச் சொல்லிவந்த கதையாகும்.
அ. வெட்டுக்கிளியும் ஆ. கூரனும் இ. பித்தக்கண்ணும்
ஈ. காடுகளும் .
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்
ponanbu
Comments
Post a Comment