சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்கம் - தந்தை/002/100-2021
சங்கத்தமிழ் மீட்டெடுப்பு இயக்கம் - தந்தை/002/100-2021
அல்லும் பகலும் அயராது பாடுபடுவோன்.
அண்டதின் பொலிவிற்காய் அனுதினமும் உழைப்பவன். ஆக்கங்கள் கண்டிட தன் துயிலினைத் துறப்பவன். குழந்தைகளின் குதூகலத்தில் தானும் குழந்தையாய் மாறுபவன். குடும்பத்திற்குத் தாய் விளக்கெனில் , தந்தையே என்றும் நெற்றித்திலகம்.
1. அல்லும்= இரவிலும்
2. அயராது = சோர்வின்றி
3.அண்டதின்= உலகின்
4.ஆக்கங்கள்= வெற்றிகள்
5.துயிலினை= தூக்கம்
6.குதூகலத்தில்= மகிழ்வினில்
7.நெற்றித்திலகம்= நெற்றிப்பொட்டு / குங்குமம்.
விளக்கம் :
இரவிலும் பகலிலும் சோர்வின்றிப் பாடுபடுவோன்.
உலகின் பொலிவிற்காய் அணுதினமும் உழைப்பவன். வெற்றிகள் கண்டிட தன் தூக்கத்தைத் துறப்பவன். குழந்தைகளின்மகிழ்வினில் தானும் குழந்தையாய் மாறுபவன். குடும்பத்திற்குத் தாய் விளக்கெனில் , தந்தையே என்றும்
நெற்றிப்பொட்டு.
07அக்டோபர்2021
அன்புச்செல்வன் பழ .
9444892969
அரும்பாக்கம் , சென்னை -600 106. இந்தியா.
ponanbu
Comments
Post a Comment