தமிழர் விருந்தோம்பல்
பத்தாம் : வகுப்பு செய்யுள் இயல் : மூன்று
தமிழர் விருந்தோம்பல்
விருந்தோம்பலின் முதல்நிலை மகிழ்வித்து மகிழ்தலே ஆகும்.
காசிக்கண்டம்
காசி மாநகரின் ( வாரணாசி ) பெருமைகளைக்கூறும் நூல் ஆகும். இது வாழ்வியல் அறங்கூறும் நூலாகும். இப்பாடல் இல்லொழுக்கம் கூறிய பதியில் உள்ள 17- வது பாடல் ஆகும்.
அதிவீரராம பாண்டியர்
தமிழ்ச் சங்கம் வைத்து வளர்த்த பெருமை உடையது பாண்டிய நாடு. அந்நாட்டின் அரசரே அதிவீரராம பண்டிதர் ஆவர். நல்ல புலவராகவும் விளங்கினார். சீவல மாறன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
தமிழரின் தலைசிறந்த அறம் விருந்தோம்பல் ஆகும் .
இல்லறம் காண்பதும் விருந்தோம்பல் என்னும் நல்லறம் செய்வதற்காகவே ஆகும் .
விருந்தினரை வரவேற்கும் ஒன்பது முறைகள் பற்றி இங்கு காண்போம்.
விருந்தினரை வரவேற்கும் வகையில் நாம் செய்யவேண்டியன...,
1. அவர்களின் உயர்ந்த குணங்களை வியந்து உரைத்தல்.
2, நல்ல சொற்களை இனிமையாகப்பேசுதல் .
3. முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல் .
4. வீட்டிற்குள் வருகவென வரவேற்றல் .
5. அவர் எதிரில் நிற்றல் , இருத்தல் .
6. அவர்களின் மனம்மகிழும்படி பேசுதல் .
7. அவர்களின் அருகில் அமர்ந்து கொள்ளுதல் .
8. விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல் .
9. புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் .
அதிவீரராம பாண்டியர் எழுதிய நூல்கள்
1. காசிக்காண்டம்.
2. வெற்றிவேட்கை எனும் நறுந்தொகை.
3. நைடதம்.
4. லிங்க புராணம்.
5.வாயு சம்கிதை.
6.திருக்கை அந்தாதி.
7.கூர்ம புராணம்.
தமிழன் என்று சொல்லடா....!! தலை நிமிர்ந்து நில்லடா..!!
அன்புடன்
வாழ்க வளமுடன் ..! வாழ்க வையகம் ..!!
ponanbu
Comments
Post a Comment