மௌனம் தொலைக்காதே ....!
மௌனம் தொலைக்காதே ....!
உலகின் உன்னதமொழி
உயிர்ப்பின் தனிமொழி.!
உலக உயிர்களின்
உயர்ந்தமொழி...!
உடல்மொழி விளக்கம்
சிறக்கச் செய்யும் மொழி.!
யோகத்தின் மூலமும்
கற்க இயலாமொழி ..!
அன்பின் நிலையை
மிகத்தெளிவாய்ச் சொல்லும் மொழி ..!
இறைவன் நம்மில் சிலருக்கு மட்டுமே
இலவசமாய்த் தந்தமொழி.....!
ஈடு இணையிலாத ஞானியின்
நிலையே நல்கும் ஊமையெனும் உயர்ந்த மொழி .....!
கவிஞர் வாரூர்ச்செல்வன் - 94444892969
அரும்பாக்கம் சென்னை - 600106.
ponnabu


Comments
Post a Comment