பாரிக்குக் கவிபாடிய கபிலர்
பாரிக்குக் கவிபாடிய கபிலர்
புறநானூற்றில் தன் புலமையால் புகழ் பெற்றவர் .
குறிஞ்சி பாடுவதில் வல்லவர் .
ஒளவையாருக்கும் பாரிக்கும் நல்ல நண்பர் .
பறங்குன்றினில் பாடித்திருந்த நிலா .
கடையெழு வள்ளல்களில் பாரியே உயர்ந்து நிற்கிறான் .
மலைவளம் காணவந்த பாரி , முல்லைக்கொடியொன்று கொழுகொம்பின்றி தரையினில் படர்ந்திருப்பதைப்பார்த்தான் . தாயுள்ளம் கொண்ட பாரி தான் ஏறி வந்த தேரினையே முல்லைக்கொடிக்குக் கொடையாக வழங்கினான். நடந்தே தனது அரண்மனையை அடைந்தான். ஓரறிவு உயிராகிய முல்லைக்கொடிக்கும் உதவும் பாரியின் உள்ளங்கண்டு புலவர்கள் வியந்தனர். கலைஞர்களுக்கும் , புலவர்களுக்கும், தன்னை நாடி வரும் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாது வாரி வழங்கும் தாயுள்ளம் கொண்டவனாகத் திகழ்ந்தான் பறம்பின் மன்னனாம் பாரி . குறுநில மன்னனே ஆனாலும் மூவேந்தர்களுக்கு இணையான பெரும்புகழுடன் விளங்கினான். அதுவே அவனது முடிவிற்கும் காரணமாக அமைந்துவிட்டது. தனது அன்பு மகள்க ளான அங்கவை , சங்கவையை மூவேந்தரும் பெண்கேட்டு நின்றனர் . பாரி பெண்தர மறுத்தான். அதனால் போர் மூண்டது. மூவேந்தராலும் பாரியை வெல்ல இயலவில்லை. கடுஞ்சினம் கொண்ட வேந்தர்கள் மூவரும் பாணர்கள் , கூத்தர்கள் போல வேடமணிந்து சென்று , பாரியை வஞ்சகமாகக் கொன்றனர் .வருந்திய கபிலர் பாரியின் மகள்களை , ஒளவையாரிடம் ஒப்படைத்தார்.ஒளவையாரும் அம்மக்களை மணம் முடித்துக்கொடுத்தார்.
300 ஊர்களை ஆண்ட பெருமைக்குரியவன் வள்ளல் பாரி . நிலவளம் , நீர்வளம் மழை வளம் என எல்லா வளங்களும் சிறந்திருந்தது பாரியின் நாடு . கொடுங்குன்றம் , பறம்பு நாடு , பறம்பு மலை , முதுபெருங்குன்றம் எனப்பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது.
பாரி ஏன் மழையோடு ஒப்பிட்டுப்பாடப்பட்டான்... ................................செய்தி..., பாடல் .. நாளை ...!
ponanbu
Congratulations Anbuselvan Sir...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே. மிக்க மகிழ்ச்சி.
DeleteVery nice
ReplyDeleteVery nice sir
ReplyDelete