பூக்கட்டும் புத்துலகம்
அன்புநிலை பூக்குமெனில் அரவணைப்பு கூடிவிடும்
ஆசையது பூக்குமெனில் நேசமது நீண்டுவரும்
இன்பநிலை பூக்குமெனில் இறைநிலையே வந்துவிடும்
ஈகைகுணம் பூக்குமெனில் இரக்கமது இருந்துவிடும்
உவகைநிலை பூக்குமெனில் உள்ளங்கள் மகிழ்ந்திருக்கும்
ஊக்கமது பூக்குமெனில் உயர்நிலையே கூடிவிடும்
எழுச்சியது பூக்குமெனில் எண்ணங்கள் சேர்ந்துவிடும்
ஏற்றமது பூக்குமெனில் ஏழ்மைநிலை ஓடிவிடும்
ஒற்றுமை பூக்குமெனில் வெற்றிகள் குவிந்துவிடும்
ஓதுதல் பூக்குமெனில் அறிவொளி தொடர்ந்து வரும்
ஒளதடம் பூக்குமெனில் நோய் நொடிகள் அகன்றுவிடும் ..!
அன்புடன்
உங்கள் அன்பின் அன்பன்...!
தமிழாசிரியர்
அன்புச்செல்வன் பழ .
கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண் மேனிலைப்பள்ளி
அரும்பாக்கம் , சென்னை -600 106.
9444892969
ponanbu

Comments
Post a Comment