மறந்துபோன கிராமங்கள்
மறந்துபோன கிராமங்கள்
உழவு மாடுகளை மறந்தோம் நாம் !
ஏர் பிடிக்கும் உழவனையும் மறந்தோம் நாம்!
மண் வாசனை மறந்தோம் நாம் !
நம் மண் மக்களை மறந்தோம் நாம் !
பாட்டி சொன்ன கதைகளை மறந்தோம் நாம் !
கணினி வலையில் சிக்கி நம்மை மறந்தோம் நாம் !
ஆலமர நிழலின் அருமை மறந்தோம் நாம் !
வீர விளையாட்டையும் மறந்தோம் நாம் !
கிணற்றின் மீன்களை மறந்தோம் நாம் !
மண்பானைச் சோற்றை மறந்தோம் நாம் !
அனைத்தையும் மறந்து நிற்கதியாய் நிற்கும்
மனிதனின் மனம் மறந்தது மணமிகு கிராமங்களை !!!!
- டேனியல் மனோஜ் குமார்
சென்னை - அரும்பாக்கம்
ponanbu
Comments
Post a Comment