பாரிக்குக் கவிபாடிய கபிலர்
பாரிக்குக் கவிபாடிய கபிலர் புறநானூற்றில் தன் புலமையால் புகழ் பெற்றவர் . குறிஞ்சி பாடுவதில் வல்லவர் . ஒளவையாருக்கும் பாரிக்கும் நல்ல நண்பர் . பறங்குன்றினில் பாடித்திருந்த நிலா . கடையெழு வள்ளல்களில் பாரியே உயர்ந்து நிற்கிறான் . மலைவளம் காணவந்த பாரி , முல்லைக்கொடியொன்று கொழுகொம்பின்றி தரையினில் படர்ந்திருப்பதைப்பார்த்தான் . தாயுள்ளம் கொண்ட பாரி தான் ஏறி வந்த தேரினையே முல்லைக்கொடிக்குக் கொடையாக வழங்கினான். நடந்தே தனது அரண்மனையை அடைந்தான். ஓரறிவு உயிராகிய முல்லைக்கொடிக்கும் உதவும் பாரியின் உள்ளங்கண்டு புலவர்கள் வியந்தனர். கலைஞர்களுக்கும் , புலவர்களுக்கும், தன்னை நாடி வரும் அனைவருக்கும் இல்லை என்று சொல்லாது வாரி வழங்கும் தாயுள்ளம் கொண்டவனாகத் திகழ்ந்தான் பறம்பின் மன்னனாம் பாரி . குறுநில மன்னனே ஆனாலும் மூவேந்தர்களுக்கு இணையான பெரும்புகழுடன் விளங்கினான். அதுவே அவனது முடிவிற்கும் காரணமாக அமைந்துவிட்டது. தனது அன்பு மகள்க ளான அங்கவை , சங்கவையை ...