உரைநடை - இயல் - 1 2025 JUNE உரைநடையின் அணிநலன்கள்
உரைநடை - இயல் - 1 உரைநடையின் அணிநலன்கள் குறிப்புச் சட்டகம் - முன்னுரை - இலக்கணம் - அணிநலன் - புதிய உத்திகள் முரண்படுமெய் - எதிரிணை இசைவு - சொல் முரண் - முடிவுரை. முன்னுரை: சங்கப் புலவர்கள் இலக்கியங்களைச் செய்யுட் பாக்களாகவே அமைத்தனர். அப்பாடல்கள் அகம் புறம் என்று வகைப்படுத்தப்பட்டன. தற்காலத்தில் உரைநடை இலக்கிய வடிவத்தில் நாவல்,சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரை எனும் வடிவில் வளர்ச்சி பெற்றுள்ளது. உரைநடையின் அணிநலன்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். அணிநலன்: இலக்கியம் என்பது படிப்பவருக்கும் கேட்பவருக்கும் இன்பம் வேண்டும். படைப்பாளி சொல்ல வரும் கருத்தை மிகத்தெளிவாக எடுத்துரைப்பதற்கு அணிநலன்கள் துணை நிற்கின்றன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில் உரைநடை பற்றியும் குறித்துள்ளார். சங்கப் பாடல்களில் உவமை அண...