Posts

Showing posts from February, 2025

பருவத்தேர்வு II MARCH- 2024-25.

  கோலப்பெருமாள் செட்டி வைணவ நடுவண்  மேனிலைப்பள்ளி எஎண் : 815 ,கோலப்பெருமாள் பள்ளித் தெரு ,  அரும்பாக்கம்,  சென்னை- 106.  பருவத்தேர்வு -  II   (  2024  - 25  ) வகுப்பு : 9.                                                                                  காலம்: 3 மணிநேரம் நாள் :05.03.2025.                                           தமிழ்                       மதிப்பெண்கள்: 80 (பகுதி -அ) I.  பத்தியைப்படித்துணர்ந்து வினாக்களுக்கு விடையளிக்க  :                5×1=5.     சோழன் பகைவரை வென்று வீரத்தை நிலைநாட்டும்...

" காலம் உடன் வரும்" கதையைச் சுருக்கி எழுதுக ( இயல் - 6 வகுப்பு - 8 ) 2025.

 "  காலம் உடன் வரும்"  கதையைச்  சுருக்கி எழுதுக  ( இயல் - 6 வகுப்பு - 8 ) முன்னுரை  சுப்பிரமணியத்தின் கவலை  நண்பர் இரகுவின் உதவி  பாவு பிணைத்தல்  முடிவுரை  முன்னுரை:  நெசவுத்தொழிலில் ஏற்படும் இன்னல்களை மிகத்தெளிவாக விளக்கி உள்ளது கதை . வறுமையில்  வாடும் நெசவாளர்களின்  நிலையையும் , அவர்களின்  கடுமையான  உழைப்பையும் காட்டுவதாக அமைந்துள்ளது  ஒச்சம்மாவின்  கதை .  சுப்பிரமணியத்தின் கவலை: வழக்கமாக வெள்ளக் கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத்  துணிகளை அனுப்பி வைப்பார்கள்.  ஒருநாள் தறிநெய்ய ஆள் இல்லாததால், துணி நெய்யத்  தாமதமானது. சுப்பிரமணி, ஆனந்திகா நிறுவனத்திடம்  ஆளில்லை என்று  சொல்லியும், அவர்கள்  நாளைக்குள் கட்டாயம் துணியை  அனுப்பி வைக்க வேண்டும் என்றனர். எப்படியாவது  துணியை நெய்து  முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்கினார்  சுப்பிரமணி.  நண்பர் இரகுவின் உதவி  : சுப்பிரமணி,  இரகுவின் தறிப்பட்டறைக்குச் சென்றார். பாவ...

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...2025

Image
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். குறிப்புச் சட்டகம்  முன்னுரை  நோய்வரக் காரணங்கள்  வருமுன் காத்தல்  உணவும் மருந்தும்  உடற்பயிற்சிகள்   முடிவுரை    முன்னுரை: மகிழ்வான வாழ்விற்கான அடிப்படை உடல் நலத்துடன் இருப்பதே ஆகும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - என்பது பழமொழி. உலகில் நீண்ட நாள் வாழ உடல் நலமாக  இருத்தல்  வேண்டும். அதனால் தான்,  "உடம்பார் அழியும் உயிரார் அழிவர்"  என்றார் திருமூலர்.   உடல் நலமே , நமது   உண்மையான செல்வம். எனவே, நோயின்றி  வாழ்வதற்கான  வழிகள்  குறித்து இக்கட்டுரையில்  காண்போம்.  நோய் வரக்காரணங்கள் : இன்றைய நமது  வாழ்க்கை இயந்திர மயமாகிவிட்டது.   சுற்றுச்சூழலும்  மாசடைந்துள்ளது. சத்துக்குறைவான உணவுகள்,  உடற்பயிற்சி இன்மை, மனவழுத்தம் ஆகியவற்றால்  மக்கள் துன்பமடைகின்றனர். துரித உணவுக்  கலாச்சாரமே  நோய்கள்  வருவதற்குக்  காரணமாகின்றன.  உடலில் ஏற்படும் எல்லா நோய்ளுக்கும் காரணம் தவறான பழக்க வழக்கமே. ...