பாரதிக்குப் பாவணக்கம்
பாரதிக்குப் பா வணக்கம் 1882ல் டிசம்பர் 11ல் உதயமான ஆதவன்; அகில உலகையும் கவியால் ஆட்டிப்படைத்தவன்; எட்டையபுரத்து எரிமலைபோல் ஏறாய்த் தோன்றியவன்; கோட்டை ஆண்ட பறங்கியர் கொட்டம் அடக்கியவன்; பாட்டாலே புத்திசொன்ன பாசமிகு பாரதக்கவிஞன்; எத்தர்களின் கைகளைப் பாட்டினால் பூட்டிய பாவலன் ; ஆழிதரு மாமழைபோல் கவிதைத்தேன் பொழிந்தவன் ; கண்ணன் மனதில் கனிந்த கற்கண்டாய் நின்றவன் ; கயவர்கூட்டைத்தைக் கூட்டோடு கருவறுக்கத் துணிந்தவன்; வறுமையில் வாடினாலும் வளமான கருத்தில் நெருப்பானவன் ; தன்னை வருத்தித் தடைதாண்டி தாயகம் காக்கத்துணிந்தவன்; கள்ளருக்கு கருமருந்து ; கற்போருக்கு கனிவிருந்து ; மனங்களில் வாழும் மகாகவிஞன் மாசற்ற கவிஞன் ; மண்ணின் மைந்தனனுக்கு மாங்கனிந்த நன்றிகள்; எங்கள் எண்ணத்தில் வாழ்பவனுக்கு வணக்கங்கள் ; பாமாலை தந்தவனுக்கு நெஞ்சமினிக்கப் பூமாலைகள் ; பாரதியே நீ அருள்க பாரதம் மென்மேலும் செழித்தோங்க உன்னெண்ணம் கேட்க நாங...