பிருந்தவன் ஆண்டுமலர் 2023 -
தேவதையைக் கண்டேன் ஒற்றைப்பார்வையில் - எனை ஒளிர வைத்தால் ....! பார்வைப் பனிமழையில் பரவசச் சிலிர்ப்பு தருபவள் நட்பின் வளர்ப்பில் நெஞ்சினில் நாளும் நேயம் துளிர்க்கிறது..! மழைத்தூறல் சிறுத்துச் சிதறலாகி வண்ணமற்ற வானில் நாளும் வானவில்லாய் வந்துபோகிறது ..! கத்தியைப் போலவே வார்த்தைகளும் கூராகின்றன கிளிகளின் மொழி இனிதெனினும் அலகுகள் வெட்டிவிடத் தவறுவதில்லை....! அப்படியும் சில பொழுதுகளைக் கடந்தோம் .., இரு புள்ளிக்கோலம் நாற்புள்ளிக்கோலமாகிறது அழகு என்பதன் இலக்கணமாய் அவள் அதன் எதிர்மறையை நான் ....! உயரவே இருந்தாலும் உள்ளத்தில் நிறைவுதான் நீண்ட இரவின் நிலாவெளிச்சம்போல் பால்வீதி பல எனினும்... பருவ நிலா ஓன்று தானே..! ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழகு என்பதன் இலக்கணம் வான்நிலா தானே.. ஆயிரம் சூரியன் உதித்து மறைந்தாலும் அவளின் முகம் மட்டும் கல்வெட்டாய் என்நெஞ்சில் ..! ஆகாய கங்கையின் அழகிய மங்கை நீ இன்பத்...